உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரியில் முகமது சாஜித் என்ற நபர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தனது மனைவியை அந்த கிராம தலைவர் போலா யாதவ் மற்றும் அவரது 3 மகன்கள் சீது, ஷீலு, ரிஷி ஆகியோர் கடந்த 3 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த போலா யாதவ், சாஜித்தை வயல்வெளியில் வைத்து அடித்து உதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். தப்பிச்சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.