கும்பமேளா நடக்கும் பிராயக்ராஜில் கங்கை நதியில் மல பாக்டீரியாக்கள் அதிக அளவில் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கைக் குழந்தையை பெண் ஒருவர் தண்ணீரில் முக்கி எடுக்கிறார். இதை பகிர்ந்த நெட்டிசன்கள் பக்தி என்கிற பெயரில் மக்கள் அறியாமையில் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.