பொதுமக்கள் சேவையில் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தமிழ்நாடு காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக "இரவு பொழுது துவங்குது" என்று தொடங்கும் முனைவர் அ. அமல்ராஜ் எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது பலராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.