லால்பேட்டை: வீராணம் ஏரி முழு கொள்ளளவு எட்டியது

58பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழை நீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏரியின் முழு கொள்ளளவான 47. 50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி