போனில் ஸ்டோரேஜ் பிரச்னையை தடுக்க செய்ய வேண்டியவை
ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற செயலிகள் மற்றும் கோப்புகளை நீக்கினால் நிறைய இடம் கிடைக்கும். Google Photos, iCloud சேமிப்பக சேவையைப் பயன்படுத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேமிக்கலாம். ஸ்மார்ட்போனின் அமைப்புகளை மேம்படுத்துவதோடு பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முடக்குவது, தானாக பதிவிறக்கம் செய்யும் அமைப்பை முடக்குவது போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் சேமிப்பிடத்தை அதிகப்படுத்தலாம்.