வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், புளி, இஞ்சி, பூண்டு, பிரண்டை, உப்பு சேர்த்து வதக்கி, ஆற வைத்து, பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து, பிரண்டை பேஸ்ட் சேர்க்கவும். அதனுடன் வறுத்து பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து ஊறுகாய் பதம் வந்தவுடன் இறக்கவும். இது எலும்புகளை வலுவாக்கும், எலும்பு தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி, முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கும் மிகச் சிறந்த மருந்தாகும்.