ஹரியானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவைப் போல சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் அறிவிப்பதில் தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை வெளியிடாதது ஏன் என்றும், முன்னணி நிலவரத்தை மாற்றி வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு பாஜக நிர்பந்தம் தருகிறதா? என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.