தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர் ஏறுமுகத்தில் உள்ளதால் சாமானியர்கள் கவலை அடைந்துள்ளனர். அண்மையில் ஒரு சவரன் ரூ.57,000-ஐ தாண்டி விற்கப்பட்டது. சென்னையில் இன்று (அக்., 08) மாற்றம் ஏதும் இன்றி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,100 ஆக உள்ளது. அதேபோல ஒரு சவரன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.