அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணிக்காக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான டுமினி பீல்டிங் செய்தார். தொடரின் 3-வது போட்டி அபுதாபியில் நேற்று(அக்.7) நடந்தது. அப்போது கடும் வெப்பம் காரணமாக தெ.ஆப்பிரிக்க வீரர்கள் சோர்வடைந்த நிலையில், டுமினி மாற்று வீரராக பீல்டிங்கில் ஈடுபட்டார். இப்போட்டியில் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.