கோவை: கர்ம யோகினி சங்கமம் -50 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு

56பார்த்தது
பெண் துறவிகள், சாதனைப் பெண்கள் உட்பட 50, 000 பேர் பங்கேற்கும் கர்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி, மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கர்ம யோகினி சங்கமம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாரதி ஹரி ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் கர்ம யோகினி சங்கமம் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் முன்னிறுத்தும் வளர்ச்சி குறித்து பேசப்படுகிறது. இதில் 50, 000 சுய உதவிக் குழு பெண்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், பெண்கள் தனக்காக எதுவும் செயல்படுவதில்லை, குடும்பத்திற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
பெண்கள் வாங்கிய கடன் உதவித்தொகை குறைவு, ஆனால் டீபால்ட் கட்டுவது அதிகம், அதனால் பெண்களின் வளர்ச்சிக்காக மட்டுமே இந்த சங்கமம் நடத்தப்படுவதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி