கோவை: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்!

73பார்த்தது
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோவையில் நேற்று நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்று தந்தார். அதன் பிறகு செம்மொழி மாநாடு கோவையில் தான் நடைபெற்றது. நான் கல்லூரியில் படித்துவிட்டு திமுகவில் இணைந்த போது தான் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது 45 நாட்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டேன். இப்போது அதே துறைக்கு முதலமைச்சர் என்னை அமைச்சராக அமர்த்தி இருக்கிறார். எப்படி நாம் தாயை மதிக்கிறோமோ அதே போல தாய் மொழியையும் மதிக்க வேண்டும். இனி வரக்கூடிய சந்ததியினர் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி