தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழுவின் தலைவர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையிலான உறுப்பினர்கள் கோவை மாநகரில் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேற்று (பிப்ரவரி 13) ஆய்வு செய்தனர்.
கோவையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாணவிகள் விடுதி, டைடல் பார்க் கட்டிடம் உட்பட பல்வேறு இடங்களில் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இதற்குக் கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ-க்கள், அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.