கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரமாதேவி (27). இவர் ராமநாதபுரத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு பஸ்சில் வந்தார்.
அப்போது பஸ் ஆர்எஸ் புரம் தேவாங்கர் பள்ளி அருகே வந்த போது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பஸ்சில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆர். எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.