பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சோமையனூர் பாரதி நகரைச் சேர்ந்த மயில்சாமி (44) என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பகுதிகளில் எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த மயில்சாமி, கடந்த சில மாதங்களாக வேலை கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 20) மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மயில்சாமியின் மனைவி மோகனசுந்தரி, கோவை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இச்சம்பவம் குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.