கோவை: ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி திருட்டு - 3 பேர் கைது!

61பார்த்தது
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்குள் புகுந்து மிரட்டி நகை, செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகன் தேவ் தர்சன், ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை விளாங்குறிச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். அப்பொழுது 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து தேவ் தர்சன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி 3 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாகன சோதனையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜின் என்பதும் அவர்கள் தேவ் தர்சன் வீட்டிற்குள் புகுந்து நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதும் தெரியவந்தது. உடனே அவர்கள் மூன்று பேரையும் நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி