கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் செயல்பட்டு வந்த கே. ஜி டெனிம் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பிரபல டெனிம் பெயரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்றுமதியில் அந்த நிறுவனம் இழப்பு சந்தித்தது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தால் சரிவர சம்பளத் தொகை வழங்க இயலவில்லை, இதனால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் இதற்கு உடனடியாக தீர்வு கண்டு நிறுவனத்தை இயக்கி ஏற்பாடு செய்வதாக கூறி பணியாற்ற கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலுவைத் தொகை மற்றும் சரி வர சம்பளம் கொடுக்காததாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மனு கொடுத்துள்ளனர்.