கோவை: குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

85பார்த்தது
கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த துயரச் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 14) குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 27-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் பலர் ஆர்.எஸ். புரம் தபால் நிலையம் அருகே உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த துயரநிகழ்வின் நினைவாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் தியாகம் நினைவுகூரப்பட்டது.

தொடர்புடைய செய்தி