கோவை: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை - பழனிச்சாமி

79பார்த்தது
கோவை ஆர். எஸ் புரம் பகுதியில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் காங்கயம் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் வெறிநாய்களால் விவசாயத்தோட்டங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 3000க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், வெறிநாய் கடிகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அந்தத் தொகையை யாருக்கு ஒதுக்கிக் கொண்டார்கள் என தெரியவில்லை எனவும், விவசாயிகளுக்கு அது கிடைக்கவில்லை, இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். 

இதற்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், இன்று செന்னிமலையில் நடந்த போராட்டம் தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதன் குறைந்தபட்சம் தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு கேட்கவில்லை எனவும், அமைச்சர் முத்துச்சாமியை மாவட்ட ஆட்சியர் மூலம் அழைத்து பேசியிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும், இதுபோல் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி