மேட்டுப்பாளையம்: கேரட் விலை உயர்வு!

79பார்த்தது
மேட்டுப்பாளையம் புதிய காய்கறி மார்க்கெட்டில் 75-க்கும் மேற்பட்ட மண்டிகள் உள்ளன. இங்கு நீலகிரி மற்றும் கர்நாடகாவில் இருந்து தினசரி காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இன்று மார்க்கெட்டுக்கு கேரட் டெல்லியில் இருந்து 2 லோடு, கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து 5 லோடு, ஊட்டியில் இருந்து 55 லோடு வந்தது. டெல்லி கேரட் ஒரு கிலோ ரூ. 25, மாலூர் கேரட் ஒரு கிலோ ரூ. 15-ல் இருந்து ரூ. 18 வரை, ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ. 40-ல் இருந்து ரூ. 75 வரை விற்பனையாகிறது. டெல்லி, மாலூரில் இருந்து கேரட் வந்த போதும் ஊட்டி கேரட்டின் விலை அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி