கோவை: பட்டா இல்லாமல் தவிக்கும் மருதாபுரம் மக்கள்

74பார்த்தது
கோவை மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட மருதாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 48 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் தவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஐந்து தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் நிலையில், 1978ம் ஆண்டு இப்பகுதிக்கு 60க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அந்த பட்டாக்களை பதிவு செய்ய மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இருக்கும் மனுவில், தங்களுக்கு அரசு சார்பில் நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குமாறும், பத்திரப்பதிவு செய்திட ஆவணம் செய்யுமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தால் குடிநீர் தேவைக்காக கிணறு, தொகுப்பு வீடுகள், பசுமை வீடு கட்ட நிதி உதவி, அவினாசி கூட்டுறவு வங்கியில் கடன் உதவி, பாதாள சாக்கடை வசதி, மின்சார வசதி, குடிநீர் இணைப்பு வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி