கோவை: மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

84பார்த்தது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய மாணவர்கள் பெருமன்றம் சார்பில் மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டதற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி