மேட்டுப்பாளையம் - Mettupalayam

லிங்காபுரம்: யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருவது வழக்கம்.  அவ்வாறு ஊருக்குள் நுழையும் வன விலங்குகள் பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே லிங்காபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது அதிகரித்து வருகிறது. இதனையொட்டி சிறுமுகையில் இருந்து லிங்காபுரம் செல்லும் சாலையில் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  இது குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் இன்று கூறியிருப்பதாவது, தற்போது லிங்காபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டும். காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வாகன ஓட்டிகள் ஊருக்குள் வரும் போது வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా
ఎమ్మెల్యే రాజాసింగ్‌ను తొక్కేస్తున్న బీజేపీ నేత ఎవ‌రు?
Nov 18, 2024, 17:11 IST/

ఎమ్మెల్యే రాజాసింగ్‌ను తొక్కేస్తున్న బీజేపీ నేత ఎవ‌రు?

Nov 18, 2024, 17:11 IST
బీజేపీ త‌ర‌పున‌ హైద‌రాబాద్‌లో గెలిచిన ఏకైక ఎమ్మెల్యే అయిన రాజాసింగ్‌కు ఇప్పుడు సొంత పార్టీలోనే అవ‌మాన‌క‌ర‌మైన ప‌రిస్థితులు ఎదుర్కొంటున్నార‌ని ఆయ‌న ఫాలోవ‌ర్స్ వాపోతున్నారు. తాజాగా బీజేపీ మూసీ బాధితుల‌కు అండ‌గా ఉండేందుకు బ‌స్తీ నిద్ర ప్రోగ్రాం కార్యాచరణను మొద‌లుపెట్టింది. అయితే ఇందులో పాల్గొనేందుకు రాజాసింగ్ పేరును బీజేపీ చేర్చ‌క‌పోవ‌డం గ‌మ‌నార్హం. బీజేపీలో కీల‌క నేత, ఢిల్లీ స్థాయికి చేరిన ఓ నాయ‌కుడికి రాజాసింగ్ అంటే న‌చ్చ‌క‌పోవడం వ‌ల్లే ఇలా జ‌రుగుతోంద‌ని ఆరోపిస్తున్నారు.