கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தமாக 638 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 29 ரயில்வே ஊழியர்கள் உள்பட 748 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் தெரிய வந்துள்ளது. RTI செயல்பாட்டாளர் ராஜு வழக்கலாவின் கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய ரயில்வே, 2023-24 நிதியாண்டில் மட்டும் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது.