திமுக கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "மது ஒழிப்பு மாநாடு அறிவித்ததில் எந்த கணக்கும் இல்லை. மக்கள் இட்ட கட்டளைப்படி பேசி வருகிறேன். மது ஒழிப்பு மாநாடு பிரச்சனையை பெரிதுப்படுத்தி கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.