தியாகராய நகர் - Thiyagarayanagar

மருத்துவ மாணவர் சேர்க்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இப்போது உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களாவது தமிழர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், அவற்றில் பெரும்பாலானவை பிற மாநிலங்களை சேர்ந்தவர்களால் கைப்பற்றப்படுகின்றன என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன என்றாலும், அந்த இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாததாகும். ஒரு மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் இனிமேல் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க முடியாது. அத்தகைய சூழலில் இப்போது உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களாவது தமிழர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களை கொண்டு தான் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீசாருக்கு ஆணையர் அருண் எச்சரிக்கை
Sep 06, 2024, 02:09 IST/வில்லிவாக்கம்
வில்லிவாக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீசாருக்கு ஆணையர் அருண் எச்சரிக்கை

Sep 06, 2024, 02:09 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். மேலும், நேர்மையின்றி செயல்படும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவல் ஆணையராக நான்பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பில் கவனம் செலுத்தினேன். பலரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டனர். எனது நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாக கருதுகிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலையும் விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் கைதாகி உள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்துக்கு வந்துள்ளது. வழக்கு விவரங்கள் குறித்த விரிவான தகவல் அடுத்த வாரம் வெளியிடப்படும். கஞ்சா, தடை செய்யப்பட்டுள்ள குட்கா போன்ற புகையிலை போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தற்போது கவனம் செலுத்தி உள்ளேன். இதற்காக சென்னை உளவுப் பிரிவில் காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது