ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் வகுப்பறைகள் - அன்புமணி

75பார்த்தது
ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் வகுப்பறைகள் - அன்புமணி
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது என இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏணியாகவும், தோணியாகவும் இருந்து உலக சமூகத்தை உயர்த்தவும், கரை சேர்க்கவும் உழைக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி