எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிக்கை: எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் செப். 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எழும்பூர் கோட்டத்திற்கு குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி காவல் நிலையம் அருகில், 110 கி. வோ துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள எழும்பூர் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்திலும், ஆவடி கோட்டத்திற்கு என். எம். சாலையில் உள்ள ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பெரம்பூர் கோட்டத்திற்கு எம். இ. எஸ் ரோடு, சிம்சன் எதிரில், 110 கி. வோ செம்பியம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள பெரம்பூர் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும். பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.