கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறக்கவில்லை: குற்றச்சாட்டு

71பார்த்தது
கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறக்கவில்லை: குற்றச்சாட்டு
கோயம்பேடு சந்தையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்கப்படாத நிலையில், லாரிகளில் கொண்டுவரும் பூஜை பொருட்களை சந்தை நுழைவு வாயிலிலேயே வியாபாரிகள் விற்பதால், தங்கள் வியாபாரம் பாதிப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 941 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி நேரடியாக 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும், 10 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சந்தையில் பொங்கல், ஆயுதபூஜை பண்டிகை காலங்கள் போன்று, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டும் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். அதில் அந்தப் பண்டிகைக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் ஒரே இடத்தில் மலிவுவிலையில் கிடைக்கும்.

லாரிகளில் பொருட்களை கொண்டு வரும் வியாபாரிகள், சந்தையில் உள்ள கடைகளில்தான் பொருட்களை இறக்கிவிட்டு செல்ல வேண்டும். அவர்களே நேரடிவிற்பனையில் ஈடுபடுவது விதிமீறல். இதை சந்தை நிர்வாகமும் சிசிடிவிகேமரா வழியே பார்த்துக் கொண்டு, நடவடிக்கை எடுக்காமல்இருப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி