சென்னையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

63பார்த்தது
சென்னையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது கடந்த 4ம் தேதி முதல் 5ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சியில் இந்திய கடலோரப் பாதுகாப்பு படை இந்திய கப்பற்படை மத்திய தொழில் பாதுகாப்பு படை நுண்ணறிவுப்பிரிவினர், சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை குடியுரிமை துறை, தேசிய பாதுகாப்பு குழு, இந்திய எண்ணை மற்றும் எரிவாயு ஆணையம், துறைமுகங்கள், உள்ளிட்ட மத்திய மாநில அரசுசார் நிறுவனங்களோடு தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மற்றும் மாநில காவல் துறையினர் என சுமார் 10000த்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

தமிழக நிலப்பகுதியில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வழிபாட்டுத்தலங்கள் மத்திய அரசு நிறுவனங்கள், மக்கள் அதிகமாக புழுங்கும்பொதுமக்களை அச்சுறுத்தல், கலவரப்படுத்துகிற நடவடிக்கைகளில் இறங்குதல் முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்களையும் அரசு வாகனங்கள் மற்றும் கப்பல்களைக் கடத்துதல், கடத்தி பிணைய கைதிகளைப் பிடித்து வைத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி