சேலம் நகரம் - Salem City

சேலம்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசிநாள்

சேலம்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசிநாள்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2025-ம் ஆண்டில் உலக மகளிர் தினவிழாவில் "அவ்வையார் விருது" வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துருக்களை வருகிற 31-ந் தேதிக்குள் தமிழக அரசின் https://awards.tn.gov.in விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்- 126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை இரண்டு நகல்களுடன் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.  இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18-வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மிகச் சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.  சமூக சேவையாளரின் அல்லது சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் குறிப்பிட வேண்டும். மேலும், தொண்டு நிறுவனத்தின் பகிர்வு, உரிமம், ஆண்டறிக்கை மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా