ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடலோர பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தில் சிக்கி பல்வேறு கால்நடைகள் உயிரிழந்த. அந்த வகையில், வெள்ளத்தில் ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்டு கடலில் மூழ்கினர். அதில் ஒரு எருமை மாடு உயிர் பிழைத்து நடுக்கடலில் சிக்கி மூச்சுவிடமுடியாமல் உயிருக்கு போராடி வருகிறது. இதனை கண்ட தாழங்குடா மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.