சேலத்தில் ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

69பார்த்தது
சேலம் மன்னார்பாளையம் வர்மாசிட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுபெருமாள் (வயது 45). பில்டிங் காண்டிராக்டர். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஹரிகாவியா என்ற மகள் உள்ளார். ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதற்காக நேற்று இரவு அழகுபெருமாள் தனது காரில் வீட்டில் இருந்து அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றார். அவர்களுடன் மகளும் உடன் சென்றார்.
அப்போது சிறிது தூரம் சென்றபோது காரின் என்ஜின் உள்ள பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்து அழகுபெருமாள் அதிர்ச்சி அடைந்து வேகமாக கீழே இறங்கினார். மேலும், காருக்குள் இருந்து அவரது மனைவியும், மகளும் அவசரமாக கீழே இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கார் தீப்பிடித்து எரியும் தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் தெய்வலிங்கம் உடனடியாக வந்து அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் கார் மீது தண்ணீரை ஊத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் போராடி காரில் பிடித்த தீயை அணைத்து கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் வந்து கார் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதும் அணைத்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி