வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலில் வாதம் நிலை பாதிக்கப்பட்டால் சுமார் 80 வகையான நோய்களை ஏற்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் கிடைக்கின்றன, இதனால் உடல் எடை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.