பென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சேலம் மாநகர பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, 5 ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது வருகிறது.
இதே போல் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை மார்க்கத்திற்கு வந்த பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர் தொடர் மழையின் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் குடைகளை பிடித்தபடி வாகனங்களில் சென்றனர்.