சேலம் பொது மக்களுக்கு பணம் வழங்கி சாப்பிட சொன்ன அமைச்சர்

64பார்த்தது
தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்
சி. வி கணேசன் நேற்று சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது பொதுமக்கள் ஏராளமானோர் மனுக்களுடன் காத்திருந்தனர் அதனை கண்ட அமைச்சர் எதற்காக வந்தீர்கள் என்றுகேட்டு அவர்களின் மனுவை வாங்கி பார்த்து தொடர்ந்து உதவி ஆணையாளரை அழைத்து உடனடியாக இவர்களுக்கு திருமண உதவி மற்றும் மாதாந்திர உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் அனைத்து மனுக்களையும் ஒரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களை சாப்டீங்களா என்று கேட்டவுடன் அவர்கள் இல்லை என்று கூறவே உடனடியாக 500 ரூபாய் எடுத்து அந்த பெண்ணிடம் வழங்கினார். மற்ற நபர்களையும் கேட்ட அமைச்சர் யாரும் சாப்பிடவில்லை என்று கூறினர். தொடர்ந்து 2000 ரூபாயை தனது உதவியாளரிடம் வாங்கி பொதுமக்களுக்கு வழங்கினார். அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு செல்ல வேண்டும் உங்களுடைய கோரிக்கை மனு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து அருகாமையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி