உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

75பார்த்தது
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கலெக்டர் பிருந்தா தேவி கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனால் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி