சென்னை தண்டையார்பேட்டையில் அனுமதியின்றி தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம், பெயர்ப்பலகையை வைக்க முயன்ற நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொடியேற்றி பெயர்ப்பலகை திறக்க இருந்ததால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி நிகழ்ச்சியை நடத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.