பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர் பட்டியல் அணி நிர்வாகியுமான பூபதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினர். இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து பாஜக நிர்வாகி பூபதி கூறுகையில் உடையாபட்டி எம்ஜிஆர் நகரில் அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் எங்கள் நிலத்தின் அருகே விளை நிலத்தை வாங்கி அங்குள்ள வழித்தடத்தை பயன்படுத்த முடியாதபடி தடுப்பு சுவர் அமைத்து விட்டனர்.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழித்தடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் கடந்த ஒரு வருடமாக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.