சேலம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவர்களின் திறனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வெகுவாக பாராட்டினார்.
சேலம் தனியார் கல்லூரி மற்றும் மார்கம் அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சுற்றுச்சுவர்களில் ஹேப்பி வால்ஸ் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக சுகாதாரம், சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, மனநலம் , மக்களை தேடி மருத்துவம், மரம் வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சாலையில் போகும்போது கைபேசி உபயோகிப்பதால் ஏற்படும் விபரீதங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரையப்பட்டன.
இதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.
தொடர்ந்து மாணவர்கள் கூறுகையில், ஹேப்பி வால்ஸ் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர்களில் தேவையற்ற போஸ்டர்களை ஒட்டுவதை தவிர்க்கவும், சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுவதாக தெரிவித்தனர்.