சேலம் மாநகர் கோட்டை சாமி தெரு பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவருக்கு இப்பகுதியில் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பானது 70 ஆண்டுகள் பழமை ஆனதாக இருந்ததால் இதனை சரி செய்து விட்டு புது வீடு கட்டுவதற்காக வீட்டினுள் இருந்த பழைய நிலக்கதவு மற்றும் ஜன்னல்கள் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று சுப்பிரமணி மற்றும் ராமு ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளிகள் உள்ளே நிலக்கதவினை உடைத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் வீட்டின் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். பிறகு பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதம் ஆகியது. கடந்த சில நாட்களாக சேலத்தில் பலத்த மழை பெய்ததால் வீடு தண்ணீரில் ஊறி போய் இடிந்து விழுந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பழைய வீடு இடிந்து விழுந்து இரண்டு தொழிலாளிகள் உள்ளே மாட்டி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.