சென்னை அயனாவரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை 7 பேர் கொண்ட கும்பல், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு எல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?. முதலமைச்சர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.