சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் இரும்பாலை அடுத்த நல்லம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (65) என்பவர். கலெக்டர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்தார். நுழைவாயில் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் மன்ணெண்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நல்லம்பட்டியில் மளிகை கடை நடத்திவரும் நான், 2019 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 37 சென்ட் நிலத்தை ரூபாய் 12 லட்சத்திற்கு ஒருவருக்கு விற்பனை செய்தேன். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ஐந்து கோடியாகும் என்னிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றி விட்டார். இதனால் தான் விற்பனை செய்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும். என்பதற்காகவும் இதில் அதிகாரிகள் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தீக்குளிக்கும் எண்ணத்தில் வந்தேன் என லட்சுமணன் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.