வெள்ளக்காடான சேலம் புதிய பேருந்து நிலையம்

52பார்த்தது
சேலத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்லும் முக்கிய இடமாக உள்ளது.
நாள்தோறும் ஏராளமான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தில் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் மழைக்காலங்களில் பேருந்து செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி வருகிறது.
தற்போது கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் சேலத்தில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் செல்ல முறையான வழி இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் பேருந்துகளுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி