வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

75பார்த்தது
வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் அகிலன், துணைத்தலைவர்கள் பிரபு, கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகபூபதி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கலந்து கொண்டு பேசும் போது, ‘காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது கட்டமாக பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 600-க்கும் மேற்பட்ட பல்வேறு நிலை பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சான்றிதழ் வழங்கும் பணியும், பட்டா மாறுதல் மற்றும் தேர்தல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு உடனடியாக எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி