சேலம் மிட்டாபுதூர் அருள்மிகு ஸ்ரீ பழநி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று (நவம்பர் 20) வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ பழநி ஆண்டவர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி, ஸ்ரீ பழநி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பசுபதீஸ்வரர், ஸ்ரீ வேல் மயில், சேவல் கொடி, பலி பீடத்துக்கு அஷ்டபந்தனம் சார்த்தி, கோபுரக் கலசம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, யாக பூஜைகளும், காலை மஹா பூர்ணாஹுதி, கும்பம் புறப்பாடுதலும் நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமான கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.