முசிறி - Musiri

தாப்பேட்டை செல்வமுத்து மாரியம்மன் தேர் திருவிழா

தாப்பேட்டை செல்வமுத்து மாரியம்மன் தேர் திருவிழா

தா. பேட்டை செல்வ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. தா. பேட்டை திருவாதிரை குலாலர் தெருவில் அமைந்துள்ள செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சக்தி அழைத்தல், சந்திமறித்தல், கரகம் பாலித்தல், பொங்கல் பூசை, கிராம தெய்வங்களுக்கு காவல் பூசை, கரகம் பரிவார தெய்வங்களுடன் ஊர் சுற்றி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேரில் செல்வ முத்து மாரியம்மன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் நலமுடன் வாழவும், வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருக்கவும், மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து செல்வ முத்து மாரியம்மன் எழுந்தருளிய திருத்தேரை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். அப்போது திருநாதிரை பெரிய மாரியம்மன் கோயில், செங்குந்தர் மாரியம்மன், பகவதி அம்மன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் செல்வ முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வஸ்திர மாலை மரியாதை செய்யப்பட்டது. தேங்காய், பழம், மாவிளக்கு படைத்து மாரியம்மனை பக்தர்கள் வணங்கினர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా