ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தமரா அருகே, நள்ளிரவு 12 மணியில் இருந்து பலத்த காற்றுடன் டாணா புயல் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. 5 மணிநேரத்திற்கு மேலாக புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.