முசிறியில் நோபல் உலக சாதனை நிகழ்வு

54பார்த்தது
திருச்சி மாவட்டம்முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் நிதிலாலயாஇசை பள்ளி சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை எம்ஐடி கல்வி நிறுவனஆலோசகர் கௌரி ராவ் துவக்கி வைத்தார் எம் ஐ டி கல்வி நிறுவன குழு உறுப்பினர் ஆதித்யா நடராஜன் இன்ஸ்பயர்லயன் சங்கத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர் -திண்டுக்கல், கரூர், ஈரோடு, கெங்கவல்லி , முசிறி உள்ளிட்டபல்வேறு பகுதிகளைச் சார்ந்த 170 மாணவ மாணவிகள் தமிழர்களின் கலைகளான பரதம், ஒயிலாட்டம் , பறை | குச்சிப்புடி, வீணை, சிலம்பாட்டம் , வயலின், யோகா ஆகியவற்றில் 4 மணி 32 நிமிடம் 21 வினாடி இடைவிடாமல் உலக சாதனை நிகழ்த்தினர். இதனை நோபல் உலக சாதனை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்அரவிந்த், மற்றும் தலைமை இயக்க அதிகாரி வினோத் ஆகியோர் அங்கீகரித்தனர். நிதிலாலயா இசைப்பள்ளிவள்ளிக்கண்ணு அவர்களுக்கு நோபல் உலக சாதனை அமைப்பின் இந்திய கலைப் பண்பாட்டு தூதுவர் அங்கீகாரம் வழங்கினர். இந்நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்எம் ஐ டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கலைவாணி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி