முசிறி - Musiri

தொட்டியம் அருகே முதியவர் விஷம் அருந்தி தற்கொலை

தொட்டியம் அருகே முதியவர் விஷம் அருந்தி தற்கொலை

தொட்டியம் அருகே உள்ள தோளூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் செல்லமுத்து வயது 70 கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு அதற்குத் தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நோய் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று பூச்சிக்கொல்லி விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా