முசிறி - Musiri

அத்தனூர் அம்மன் கோவில் சந்தன காப்பு விழா

அத்தனூர் அம்மன் கோவில் சந்தன காப்பு விழா

தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் சந்தன காப்பு விழா நடந்தது. பக்தர்கள் ஸ்ரீ ராமசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்த குடம் பால்குடம் இளநீர் காவடி எடுத்து காட்டுப்புத்தூர் முக்கிய வீதி வழியாக வந்தனர். பிறகு அத்தனூர் அம்மனுக்கு பால் தயிர் இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. இன்று பக்தர்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு படைத்தும் பூஜை செய்கின்றனர். நாளை மறுநாள் கெடா வெட்டுதல் நிகழ்ச்சியும் மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

வீடியோஸ்